Latest News
தினமும் வெவ்வேறு எண்களில் இருந்து 100 முறை போன்… கணவர் செய்த வினோத செயல்…!
தினம் தோறும் வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து தனது மனைவிக்கு 100 முறை போன் செய்து கணவர் தொந்தரவு செய்ததால் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.
ஹியோகோ மாகாணத்தை சேர்ந்த 31 வயதான பெண் ஒருவருக்கு கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தது. இந்த அழைப்புக்கு பதில் அளித்தும் சிறிது நேரம் காத்திருந்து விட்டு கட் செய்து இருக்கிறார்கள்.
இது தொடர்பாக கணவரிடம் தெரிவித்த போதும் அவர் அது குறித்து பெரிதாக எதையும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கின்றார். இது அப்பெண்ணிக்கு விரக்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருந்த பெண் ஒரு நாள் தனது கணவர் தூங்கிக் கொண்டிருக்கும்போதும் போனில் விளையாடும் போதும் அந்தப் பெண்ணுடன் நேரத்தை செலவிடும்போதும் அவளுக்கு அழைப்புகள் வராததை கவனித்திருக்கின்றார்.
பின்னர் கணவன் மீது சந்தேகம் வந்ததை தொடர்ந்து ஒரு நாள் இருவரும் ஒன்றாக ஷாப்பிங் செய்து இருக்கிறார்கள். அப்போது அப்பெண்ணின் கணவரின் செயல்களை உன்னிப்பாக கவனித்தால் அவர் தொலைபேசியை தொடவே இல்லை. அந்த சமயத்தில் தொலைபேசி அழைப்புகள் அந்த பெண்ணிற்கு வரவில்லை என்பதை உணர்ந்து, இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் இந்த தம்பதியின் தொலைபேசி பதிவுகளை ஆய்வு செய்தபோது கணவர் தான் வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து அழைத்தது தெரிய வந்திருக்கின்றது. விசாரணையில் தம்பதிகள் இருவருக்குள்ளும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இணக்கமாக இருந்து வந்திருக்கிறார்கள்.
இதையடுத்து கணவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது மனைவியை மிக நேசிப்பதாகவும் அவர் மீது சந்தேகப்பட்டு இதுபோன்ற செயல்களை செய்ததாக கூறியிருக்கின்றார். ஜப்பானில் தொலைபேசியில் தொல்லை தரும் அழைப்புகள் என்பது கிரிமினல் குற்றமாக கருதப்படுகின்றது. இதற்கு ஒரு வருடம் வரை சிறை தண்டனையும்1 மில்லியன் யென் (US$7,000) வரை அபராதமும் விதிக்கப்படுகிறது.