Latest News
பணம் கொடுத்தா மட்டும் தான் துர்கா பூஜை… இந்து மண்டலங்களுக்கு மிரட்டல் கடிதம்… அதிர்ச்சி சம்பவம்…!
வங்கதேசத்தில் துர்கா பூஜை நடத்துவதற்கு பணம் கொடுத்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று இந்து மண்டலங்களுக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
வங்கதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்திருக்கின்றது. சமீபத்தில் வங்கதேசத்தில் வெடித்த போராட்டமானது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இங்கு வசிக்கும் இந்து உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வங்கதேசத்தில் துர்கா பூஜை ஆண்டுதோறும் விவரிசையாக கொண்டாடப்படும்.
துர்கா பூஜை பந்தல் அமைத்து அங்கு பிரம்மாண்ட துர்கா சிலை வைத்து மக்கள் வழிபாடு செய்வார்கள். கடந்த சில ஆண்டுகளாக துர்கா பூஜை காலங்களில் இந்துக்களின் மீது தாக்குதல் நடப்பதாக கூறப்படுகின்றது. இதற்கிடையே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பந்தல்கள் அமைக்கப்பட உள்ளது என இந்து அமைப்புகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
துர்கா பூஜையின் போது இந்துக்கள் சிலர் கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. மேலும் துர்கா பூஜை பந்தலுக்கு உச்சபட்ச பாதுகாப்பு 24 மணி நேரமும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துர்கா பூஜை கொண்டாடப்பட உள்ள சில மண்டலங்களுக்கு 5 லட்சம் ரூபாய் தர வேண்டும் அப்படி கொடுத்தால் மட்டுமே பூஜை நடத்த முடியும் என்று மிரட்டல் கடிதம் வந்திருக்கின்றது. இது தொடர்பாக மண்டலங்களின் பொறுப்பாளர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளார்கள் போலீஸ் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.