World News
நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து… 5 பேர் பலி… வெளியான அதிர்ச்சி தகவல்…!
நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.
நேபாளம் காத்மாண்டுவில் இருந்து ரசுவா என்ற பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்காக உள்ளானது. ஏர் பைனஸ்டி என்று அழைக்கப்படும் ஹெலிகாப்டர் இன்று பிற்பகல் நுவாக்கோட்டின் சிவபுரி பகுதியில் விபத்திற்கு உள்ளானது.
இந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீ விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ஹெலிகாப்டர் காத்மாண்டுவிலிருந்து ரசூவா நோக்கி சென்று கொண்டிருந்தபோது நுவாகோட் பகுதியில் சூர்யா சவுர்-7 என்ற மலையில் மோதியது விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவல் அறிந்து அதிகாரிகள் மீட்டுக் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர். ஹெலிகாப்டர் பிற்பகல் 1.54 மணிக்கு புறப்பட்டதாக கூறப்படுகின்றது. சூர்யா சவுர்-7 பகுதியை அடைந்த பிறகு ஹெலிகாப்டர் அதிகாரிகளுடனான தொடர்பை இழந்தது. இதை அடுத்து ஹெலிகாப்டர் மூன்று நிமிடங்களில் தொடர்பை இழந்து விபத்திற்குள்ளானது தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.