World News
வீடியோ கேமில் மூழ்கி போன தந்தை… 3 மணி நேரம் துடிதுடித்து இறந்த 2 வயது குழந்தை…!
இன்றைய உலகத்தில் பெற்றோர்களின் கவனமின்மை குழந்தைகளை பெரிதளவு பாதிக்கின்றது. நவீன மயமாக்கல் காரணமாக தொடர்ந்து பலரும் டெக்னாலஜியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தாய், தந்தையினர் ஸ்மார்ட்போனில் அதிகளவு கவனம் செலுத்துவதால் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய சரியான கவனம் கிடைக்காமல் போய்விடுகின்றது.
அமெரிக்காவின் ஹரிசோனா மாகாணத்தில் உள்ள நகர்ப்புற பகுதி ஒன்றில் வசித்து வந்த ஒரு குடும்பத்தில் 2 வயது குழந்தையின் தாய் வெளியில் சென்று இருக்கின்றார். வெளியில் சென்று திரும்பி வந்து பார்த்தபோது காரில் அவரின் குழந்தை மூச்சுப்பேச்சு இல்லாமல் இருந்துள்ளது. குழந்தைக்கு சிபிஆர் உள்ளிட்ட முதலுதவி சிகிச்சை அளித்த போதும் பயனில்லை.
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தை 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் உயர்ந்ததாக தெரியவந்தது. பின்னர் விசாரணையில் குழந்தையின் தந்தை வீட்டிற்கு முன்பு இருந்த ஹோண்டா காரை பார்க் செய்து அதில் குழந்தையை விட்டுவிட்டு வீட்டில் போய் ப்ளே ஸ்டேஷனில் சென்று வீடியோ கேமில் விளையாடிக் கொண்டிருந்தார்.
காருக்குள் ஏசி ஓடாத காரணத்தினால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அந்த இரண்டு வயது குழந்தை வெப்பத்தில் துடிதுடித்து உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தை வன்கொடுமை பிரிவின் கீழ் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.