World News
எத்தியோப்பியாவில் கனமழை… மண் சரிவில் சிக்கி 157 பேர் பலி…!
எத்தியோப்பியா நாட்டில் மண் சரிவில் சிக்கி பலியானவரின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது .
தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கொஸ்டின் என்ற மாவட்டத்தில் கடந்த 21ஆம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் உட்பட 55 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது எத்தியோப்பியாவில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தீயணைப்பு துறையினர் தேடுதல் நடத்தி வருகின்றனர்.
இதுவரை 5-க்கும் மேற்பட்டோரை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டுள்ள நிலையில் இன்னும் பலர் சிக்கி இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.