இங்கிலாந்தில் 6 மாத ஊரடங்கா? சுகாதாரத்துறை ஆலோசனை!

இங்கிலாந்தில் 6 மாத ஊரடங்கா? சுகாதாரத்துறை ஆலோசனை!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக ஆறு மாத காலத்துக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 24,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

இப்போது இத்தாலி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு அபாயகரத்தை எட்டியுள்ளது. அதன் ஒரு கட்டமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை உறுதி செய்த போரிஸ் ஜான்சன் டிவிட்டர் பக்கத்தில் ‘கடந்த 24 மணிநேரத்தில் கோவிட்- 19  அறிகுறிகள் ஏற்பட்டன. தற்போது கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது. அதனால் என்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனினும் அரச நடவடிக்கைகளை காணொலிக் கருத்தரங்கு மூலம் நடத்துவேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து கரோனாவை வென்று காட்டுவோம். #StayHomeSaveLives”’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரொனா வைரஸ் அந்நாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அங்கு ஆறு மாத காலத்துக்கு அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தால் நிலைமைக் கட்டுக்குள் வரும் எனத் தெரிகிறது. இது சம்மந்தமாக  பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் சுகாதாரத்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆறு மாத ஊரடங்கு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.