Latest News
மனித குலத்திற்கு பேரழிவு… பூமியை நோக்கி வரும் விண்கல்… இஸ்ரோ தலைவர் எச்சரிக்கை…!
பூமியை நோக்கி பெரிய விண்கல் ஒன்று வேகமாக நகர்ந்து வருவது மனித குலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று இஸ்ரோ விஞ்ஞானி எச்சரித்து இருக்கின்றார்.
அபோபிஸ் என்பது எகிப்து நாகரீகத்தில் அழிவின் கடவுள் என்று பெயர். இந்த பெயரை வைத்திருக்கும் பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வேகமாக நகர்ந்து வருவது மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானி எச்சரித்து இருக்கின்றார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கலானது வரும் 2029 ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி பூமியை தாக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த விண்கல்லை ஸ்பேஸ் ஆப்ஜெக்ட் ட்ராக்கிங் அண்ட் அனாலிசிஸ் உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் இந்த அச்சுறுத்திலிருந்து தப்பிக்க இந்தியா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறி இருக்கின்றார்.
தற்போது பூமிக்கு 32 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த விண்கல் அளவில் மிகப்பெரியதாக இருக்கின்றது. பூமிக்கு அருகில் இந்த விண்கலை தவிர வேறு எந்த ஒரு விண்கலும் இவ்வளவு பெரியதாக வந்தது இல்லை என்று அவர் தெரிவித்து இருக்கின்றார். குஜராத்தில் இருக்கும் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தை விட இந்த விண்கல் பெரியது என கூறப்படுகின்றது.
அதாவது சுமார் 350 முதல் 450 மீட்டர் வரை இதன் விட்டம் இருப்பதாக கூறப்படுகின்றது. 2029 ஆண்டு பூமிக்கு மிக அருகில் இந்த விண்கல் வரும் நிலையில் பூமி மீது மோதும் பட்சத்தில் பேரழிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.