Connect with us

வலியே இல்லாம சாகணுமா…? இதோ ஒரு அரிய கண்டுபிடிப்பு… சுவிட்சர்லாந்தில் விரைவில் அறிமுகம்…!

World News

வலியே இல்லாம சாகணுமா…? இதோ ஒரு அரிய கண்டுபிடிப்பு… சுவிட்சர்லாந்தில் விரைவில் அறிமுகம்…!

சுவிட்சர்லாந்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் விருப்பத்துடன் கருணை கொலை செய்து கொள்ள அனுமதி இருக்கின்றது. இதை தனிமனித உரிமையாக அரசு கருதுகின்றது. இதனால் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப இறப்பவர்கள் வலியே இல்லாமல் இறக்க தற்கொலை ஸ்விட்சர்லாந்து அரசு விரைவில் கொண்டுவர முடிவெடுத்துள்ளது.

சார்கோ கேப்சூல் என்று அழைக்கப்படும் இந்த பாட்கள் 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஒரு நபர் அதில் படுத்துக்கொள்ளும் அளவிற்கு வசதி இருக்கின்றது. இந்த கேப்சூலுக்குள் ஒரு நபர் படுத்ததும் அதில் உள்ளே இருக்கும் பட்டனை அழுத்தினால் உள்ளே உள்ள காற்றின் ஆக்சிஜன் வாயு வெளியேறி நைட்ரஜன் மட்டுமே அதில் இருக்கும். இதனால் மயக்கம் ஏற்பட்டு ஐபோக்ரியா மூலம் உயிரிழப்பு ஏற்படும்.

சுவாசிக்கும் காற்றானது 78 சதவீதம் நைட்ரஜனாலும், 20 சதவீதம் ஆக்ஸிஜனாலும் மீதம் ஆர்கான் மற்றும் கார்பன்-டை-ஆ ஆகியவற்றாலும் ஆனது. தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் முதியவர்கள் மரணத்தை எதிர்கொள்வதற்கு இந்த திட்டத்தை ஸ்விட்சர்லாந்து அரசு உருவாக்கி இருக்கின்றது.

இந்த வகையில் இறக்க விரும்புவோர் அவர்களின் மனநிலையை சோதிக்க உளவியல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள். இப்படி மரணிக்க விரும்புவோர் இந்த கேப்சூலுக்குள் சென்ற உடனே கதவு மூடப்படும். உள்ளே உள்ள ஆட்டோமேட்டிக் இயந்திரக் குரல் உங்களை கேள்வி கேட்கும். நீங்கள் யார்? எங்கு இருக்கிறீர்கள்? பட்டனை அழுத்தினால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பும்.

அதற்கு நீங்கள் சரியாக பதிலை அளித்தினால் சுமார் ஐந்து நிமிடங்களில் நீங்கள் மரணம் அடைந்து விடுவீர்கள். பட்டனை அழுத்திய பிறகு தங்களது முடிவை யாராலும் மாற்றிக்கொள்ள இயலாது . இன்னும் சில மாதங்களில் இதனை சுவிட்சர்லாந்தில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

More in World News

To Top