Latest News
இந்த வருடம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட 6 தமிழ் படங்கள்… எது எது தெரியுமா..?
இந்த வருடம் ஆஸ்கார் விருதுக்கு ஆறு தமிழ் படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த படங்கள் என்பது குறித்து இதில் பார்ப்போம்.
ஆஸ்கார் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 29 படங்களை இந்திய திரைப்பட கூட்டமைப்பு பரிந்துரை செய்து அனுப்பி வைத்துள்ளது. இதில் ஆறு தமிழ் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம், அடுத்தது விக்ரம் நடிப்பில் வெளியான தங்களான் திரைப்படம்.
சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி திரைப்படம், ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வாழை திரைப்படம். ஜமா ஆகிய படங்கள் ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இது மட்டும் இல்லாமல் ஹிந்தியில் 12 படங்களும், தெலுங்கில் 6 படங்களும், மலையாளத்தில் 4 படங்களும், மராத்தியின் 3 படங்களும், ஒடியாவில் ஒரு படமும் என்று மொத்தம் 29 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது, இவற்றில் லேப்டா லேடீஸ், கல்கி 2898ad, ஆட்டம், ஆடுஜீவிதம், ஆர்டிகள் 370, அனிமல் ஆகிய படங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.