கொரொனாவால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களே! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

கொரொனாவால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களே! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

கொரொனா வைரஸால் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள்தான் எனற ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,00,000 ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் இறந்தவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ நெருங்கி வருகிறது. இதனால் வைரஸ் பரவியுள்ள 202 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2800 ஆக உயர்ந்துள்ளது.

கொரொனாவுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து ஆராய்ச்சி செய்த போது, அதிர்ச்சியளிக்கும் முடிவுகள் வெளியாகியுள்ளன. கொரோனாவால் இறந்தவர்களில் 71 சதவீதம் ஆண்கள் என்றும் 29 சதவீதம் பெண்கள் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதற்குக் காரணம் அண்களின் மதுப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கம் ஆகியவையும், சமூக விலகலை ஒழுங்காகக் கடைபிடிக்காததும் முக்கியமானக் காரணம் என சொல்லப்படுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.