World News
விமானங்களில் தேங்காய்க்கு அனுமதி இல்லையா… எதுக்கு தெரியுமா…?
விமானங்களில் தேங்காய்க்கு அனுமதி இல்லை என்று கூறப்படுகின்றது. அதற்கான காரணம் குறித்து இதில் நாம் தெரிந்து கொள்வோம்.
விமான பயணத்தின் போது நாம் சில பொருட்களை நம்முடன் எடுத்துச் செல்வோம். ஆனால் சில பொருட்களை எடுத்து செல்வதற்கு விமான நிறுவனங்கள் நிபந்தனைகளை விதிக்கின்றது. விமானத்தில் பயணம் செய்யும்போது நாம் சில விதிகளை பின்பற்ற வேண்டும். பயணத்தின் போது எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாத சில விஷயங்கள் இருக்கின்றது.
கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உட்பட பல பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. இது மட்டும் இல்லாமல் தேங்காயையும் விமானத்தில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. தேங்காய் தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று. ஆனால் தேங்காயை விமானத்தில் எடுத்துச் செல்வதற்கு அனுமதி கிடையாது.
ஏனென்றால் தேங்காயில் அதிக அளவு எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் எரியக்கூடிய பொருளாக வகைப்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று கூறப்படுகின்றது. விமான நிலைய விதிமுறைகள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டன .
பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் சில மருந்துப் பொருட்களும் இனி எடுத்து செல்வதற்கு புதிய விதிமுறைகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த மருந்துகள் குறித்தும் மாற்றங்கள் பயணிகள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.