Latest News
நாயால் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… நீதிமன்றம் கொடுத்த உத்தரவு…!
நாய் குறைத்ததால் பயந்து போன கர்ப்பிணி பெண்ணுக்கு கரு கலைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
சீனாவில் லீ என்ற நபரின் நாய் 41 வயதான கர்ப்பிணியை பயமுறுத்தியதால் அவரின் 4 மாத கருவானது கலைந்துள்ளது. இவர் கர்ப்பம் அடைவதற்காக 3 வருடங்களுக்கு மேல் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தையை இழந்து விட்டதாக யான் என்கின்ற பெண் மிகுந்த வேதனை அடைந்தார்.
இதையடுத்து நாயின் உரிமையாளர் மீது பெண் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்போது இடத்தில் நாயை கட்டி வைக்காமல் அவிழ்த்துவிட்டு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கர்ப்பிணி பெண்ணுக்கு இழப்பை ஏற்படுத்தியவருக்கு சுமார் 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி லீக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இருப்பினும் நீண்ட சிகிச்சைக்குப் பிறகு கர்ப்பமான பெண்ணுக்கு கரு கலைந்த சம்பவம் அவருக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.