World News
10 மணி நேர சவால்… அளவுக்கு மீறிய உணவு… பரிதாபமாக உயிரை விட்ட சீனப்பெண்…!
சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 10 மணி நேரம் சவால் விட்டு அளவுக்கு மீறிய உணவை சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.
சீனாவை சேர்ந்த 24 வயதான பான் சியோட்டிங் என்ற இளம் பெண் பிரபல youtube ஆவார். இன்ஃப்யூஷனாக இருந்து வரும் இவர் தான் சாப்பிடும் வகை வகையான உணவுகளை youtube-ல் வீடியோவாக வெளியிடுவார். பலமுறை உணவு சாப்பிடும் சவால்களையும் செய்து வருகின்றார். இதன் மூலமாகவே இவர் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் பான் சியோட்டிங் தொடர்ந்து பத்து மணி நேரம் உணவு சாப்பிடும் சவாலை எதிர்கொண்டார். ஒரு வேலைக்கு 10 கிலோ உணவு சாப்பிடும் பழக்கத்தை கொண்ட இவர் பெற்றோர் மற்றும் இவரின் நண்பர்கள் எச்சரித்த போதிலும் அவர் தொடர்ந்து அந்த உணவு உண்ணும் சவாலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 14ஆம் தேதி இவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது வயிறு சிதைவடைந்து விட்டதாகவும், செரிக்கப்படாத உணவுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் சியோட்டிங்கின் இந்த மரணம் சமூக வலைதள பக்கங்களில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இது போன்ற சவால்களை எதற்காக செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.