அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகள் குடியேற தடை-அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகள் குடியேற தடை-அதிரடி அறிவிப்பு

உலகம் முழுவதும் சீனாவில் இருந்து உருவான வைரசால் கொரோனா தொற்று ஏற்பட்டு உலகம் முழுவதும் பல லட்சம் எண்ணிக்கையில் மக்கள் மாண்டு வருகின்றனர்.

இதற்கு தடுப்பு மருந்து இதுவரை வராத நிலையில் உலகமே கொரோனாவோடு போராடி வருகிறது. இந்த வைரஸை பரப்பிய சீனா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆரம்பத்தில் இருந்தே சொல்ல முடியாத கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.

சீன வைரஸ் என்றே அவர் அதை குறிப்பிட்டார். இது சர்ச்சையானது சீனாவை மிக மோசமான எதிரியாக ட்ரம்ப் பார்த்து வரும் நிலையில் சமீபத்தில் ட்ரம்புக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இந்நிலையில் கம்யூனிஸ்டுகள் யாரும் அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சீனாவை ஆள்வது கம்யூனிஸ்ட் அரசு என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவுக்கு அமெரிக்கா விடுக்கும் மறைமுக எச்சரிக்கை போல இவ்விசயம் தோன்றுகிறது.