Connect with us

செல்போன் பயன்பாட்டுக்கும் மூளை புற்று நோய்க்கும் தொடர்பு இல்லை… ஆய்வில் வெளியான தகவல்…!

Latest News

செல்போன் பயன்பாட்டுக்கும் மூளை புற்று நோய்க்கும் தொடர்பு இல்லை… ஆய்வில் வெளியான தகவல்…!

செல்போன் பயன்பாட்டிற்கும் மூளை புற்று நோய்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. செல்போன் மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. செல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. நோய் தாக்கும் என்ற அச்சமும் நிலை வருகிறது.

இது குறித்து உலக அமைப்பு மற்றும் இதர சர்வதேச சுகாதார அமைப்புகள் செல்போன் பயன்பாட்டிற்கும் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவந்துள்ளனர். இருப்பினும் இது குறித்து விரிவான ஆய்வு நடத்துவது அவசியம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு செல்போன் பயன்பாட்டிற்கும் மூளை புற்று நோய்க்கும் சம்பந்தம் உள்ளதா? என்று ஆய்வு நடத்தியது. அதில் 10 நாடுகளை சேர்ந்த 11 ஆய்வாளர்கள் இதில் பங்கேற்று உள்ளனர். இதில் ஆஸ்திரேலியா அரசின் கதிரியக்க பாதுகாப்பு குழுவும் பங்கேற்று இருந்தது. இதில் 1994 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட 63 ஆய்வுகளின் முடிவுகளும் இந்த ஆய்வில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

செல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் தெரிவித்திருப்பதாவது “செல்போன் பயன்பாட்டிற்கும் மூளை புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகரிப்பதற்கும் சந்தேகம் இல்லை. நீண்ட நேரம் செல்போன் பேசுபவர்களுக்கும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக செல்போன் பயன்படுத்தி வருபவர்களுக்கும் கூட இது பொருந்தும் . செல்போன் பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்திருக்கின்றது. அதற்கேற்றார் போல் மூளை புற்றுநோய் அதிகரிக்கவில்லை. இதிலிருந்து இந்த இரண்டிற்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது” என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

More in Latest News

To Top