Latest News
டாய்லெட் பிரேக் போகலைன்னா போனஸ் பாயிண்ட்… குழந்தைகளை படுத்தி எடுத்த கணக்கு டீச்சர்..!
குழந்தைகள் டாய்லெட் பிரேக் போகாமல் இருந்தால் போனஸ் மதிப்பெண்களை கொடுப்பதாக கூறி டார்ச்சர் செய்து இருக்கின்றார் கணக்கு டீச்சர்.
அமெரிக்காவை சேர்ந்த கணக்கு ஆசிரியை ஒருவர் மாணவர்கள் கழிவறைக்கு செல்ல இடைவெளி எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் போனஸ் மதிப்பெண்களை வழங்கி ஊக்கிவித்து இருக்கின்றார். இதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றது. ஒரு பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. அங்கு பயின்று வந்த சிறுமியின் தாய் இது தொடர்பாக சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு இருக்கின்றார்.
மதிப்பெண்களை தேடி ஓடும் ரேசாக உலகம் முழுவதும் கல்வியானது தற்போது தரம் தாழ்ந்து இருக்கின்றது. அந்த வகையில் சிறுவர்கள் மதிப்பெண்களை முக்கியம் என்று மூளைச்சலவை செய்யப்பட்டு இருப்பதால் அந்த மதிப்பெண்களுக்காக அவர்கள் தங்களின் பல விஷயங்களை மாற்றிக் கொள்கிறார்கள். தங்களின் இயற்கை உபாதையையும் அடக்கிக் கொள்ளும் அவலம் தற்போது நிகழ்ந்திருக்கின்றது.
எனது மகளின் கணக்கு ஆசிரியை ஒருவர் ஒரு வினோதமான பாலிசியை வைத்திருக்கின்றார். அதன்படி வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே பள்ளியில் குழந்தைகளை பாத்ரூம் போகுவதற்கு அவர் அனுமதித்துள்ளார். அதன்படி பாத்ரூம் போகாமல் வகுப்பறையிலேயே இருந்து பாடத்தை கவனிக்கும் குழந்தைகளுக்கு அவர் அகாடமிக் பாயிண்ட்ஸ் எனப்படும் குழந்தைகள் படிக்கும் தரத்தை நிர்ணயிக்கும் மதிப்பெண்களை போனசாக வழங்கியிருக்கின்றார் என்று அந்த சிறுமியின் தாய் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிரின்சிபாலிடம் புகார் தெரிவித்து மெயில் அனுப்பியதற்கு தங்கள் மகள் தன்னிடம் கோபித்துக் கொள்ளும் அளவுக்கு அந்த விஷயம் ஆக்கப்பட்டுள்ளது பெரும் வருத்தத்தை தருகின்றது. பிரைவசி கருதி அந்த தாய் அவரது மகளின் பெயரையும் வயதையும் குறிப்பிடாமல் இருந்திருக்கின்றார். இந்த விவகாரம் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.