Latest News
எப்படி இருந்த மனுஷன் இப்ப எப்படி இருக்காரு..? 90ஸ் கிட்ஸ்களின் நாயகன்… WWF வீரர் படிஸ்டாவுக்கு என்னாச்சு…!
90’ஸ் கிட்ஸ்களின் பேவரட் நாயகன் WWF வீரர் படிஸ்டாவின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு என்ன ஆகிவிட்டது என்று கேட்டு வருகிறார்கள்.
90’ஸ் கிட்ஸ்களுக்கு ஏகப்பட்ட பேவரட் நிகழ்ச்சிகள் இருக்கின்றது . அதிலும் WWF நிகழ்ச்சியும், அந்த நிகழ்ச்சியில் வரும் மல்யுத்த வீரர்கள் பலரையும் மறக்க முடியாது. அண்டர்டேக்கர், ஜான் சீனா, படிஸ்டா, ராக் உள்ளிட்ட பலரும் 90களில் ஃபேவரிட் வீரர்கள். அதிலும் டேவ் படிஸ்டாவை யாரும் மறந்திருக்க முடியாது.
எவ்வளவு வலிமையையும் தாங்கிக் கொள்வதில் கை சேர்ந்தவர் படிஸ்டா. தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களில் நடிகராகவும் நடித்து வருகின்றார். மார்வெல் யுனிவெசில் கார்டியன்ஸ் ஆப் கேலக்சி படத்தில் டிராஸ் தி டெஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த படிஸ்டா, பிளேட் ரன்னர் 2047, DUNE உள்ளிட்ட பல்வேறு படங்களில் கமிட்டாகி மிக பிஸியாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் அவரின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி கனடாவில் தொடங்கிய டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் தான் நடித்திருந்த தி லாஸ்ட் ஷோ கேர்ள் படத்தின் திரையிடலுக்காக படிஸ்டா வந்திருந்தார். அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுவெளியில் தோன்றிய போது எடுக்கப்பட்ட படிஸ்டாவின் புகைப்படத்தையும் தற்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு படிஸ்டாவுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். தனது ஜிம் பாடி லுக்கிலிருந்து மாறுபட்டு மிக ஒல்லியான தோற்றத்துடன் இருக்கிறார் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கின்றார்? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழா வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.