Latest News
குழந்தைகள் இனி இதனை பயன்படுத்த தடை… ஆஸ்திரேலியா அரசு எடுத்த அதிரடி முடிவு…!
குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
குழந்தைகளிடம் தற்போது செல்போன் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்ததாவது: “குழந்தைகளை அவர்களின் செல்போன்கள் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து விலக்கி விளையாட்டு மைதானங்கள், டென்னிஸ் மைதானங்கள், நீச்சல் குளங்களில் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் உண்மையான நபர்களுடன் உண்மையான அனுபவத்தை பெற வேண்டியது அவசியம்.
ஏனென்றால் சில சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிப்பதாக உள்ளது. சமூக ஊடகங்களில் உள்ள தகவல்கள் குழந்தைகளின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் இருக்கின்றது. இது மிகுந்த கவலையை அளிக்கின்றது. குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றோம்.
எந்த வயது குழந்தைகளுக்கு தடை விதிப்பது என்பது குறித்து வயது சரிபார்ப்பு சோதனை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இது உலகளாவிய பிரச்சனை. இதில் தீர்வு காண உலகம் எங்கிலும் அரசாங்கங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றது” என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.