நாசா கொடுத்த எச்சரிக்கை… பாதிப்பு இல்லாமல் பூமியை கடந்து சென்ற சிறுகோள்…!

நாசா கொடுத்த எச்சரிக்கை… பாதிப்பு இல்லாமல் பூமியை கடந்து சென்ற சிறுகோள்…!

சிறுகோள் ஒன்று பூமியை தாக்கும் என நாசா எச்சரிக்கை விடுத்த நிலையில் பாதிப்பு எதுவும் இல்லாமல் சிறுகோள் பூமியை கடந்து சென்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியா பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகம் விண்வெளியில் பூமிக்கு அருகில் உள்ள வான் பொருட்களை குறிப்பாக சிறு கோள்களின் நகர்வுகளை கண்காணிப்பதில் முன்னணியில் இருக்கின்றது. தற்போது மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்குகளை பயன்படுத்தி 2024-ஒன் என்ற சிறுகோளை முதலில் கண்டுபிடித்தது.

இதனுடைய அளவு வடிவம் மற்றும் நகர்வு பற்றி விரிவான தகவல்களை வெளியிட்டிருந்தது. இந்த சிறு கோள் 720 அடி விட்டம் கொண்டிருந்தது. பொதுவாக பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட இது மிகப்பெரியது. 60 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்டிருப்பதுடன் இதன் வேகம் மணிக்கு 25 ஆயிரம் மைல்கள் என மதிப்பிடப்பட்டது.

சிறுகோளின் அளவு மற்றும் வேகம் அதிக அளவில் இருந்தது. 6 லட்சத்து 20 ஆயிரம் மையில் தொலைவில் இது பூமியை கடந்து செல்லும். பூமிக்கும் நிலவுக்கும் இடையில் உள்ள தூரத்தை விட இது 2.6 மடங்கு தூரம் ஆகும். இந்த சிறு கோள் பூமியை கடந்து சென்றது. இந்த சிறுகோளின் பாதையில் சிறிய விலகல் ஏற்பட்டால் கூட அது பூமியை பாதிக்கும் என நாசா விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தார்கள்.

ஆனால் பூமிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இந்த சிறு கோள் பூமியை கடந்து சென்றதாக நாசா அறிவித்திருக்கின்றது. இந்த முறை பூமிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஆபத்துகளும் இல்லாமல் சிறுகோள்கள் கடந்துவிட்டன. விண்வெளியில் சமீபகாலமாக பூமிக்கு அருகில் வரும் சிறுகோள்கள் அது பற்றி கண்காணித்து ஆராய்ச்சி செய்வதற்காக சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் அமைப்பு ஒன்றை தொடங்கியிருக்கிறார்கள்.

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள தொலைநோக்குகளை பயன்படுத்தி இதுபோல ஆராய்ச்சி நடத்தப்பட உள்ளது என்று டெல்லி விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியும் தா வி வெங்கடேஸ்வரன் தெரிவித்திருந்தார்.