Latest News
ஒரு கிட்னியுடன் நீளம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற அஞ்சு… நெகிழ்ச்சி பதிவு…!
ஒரு கிட்னியுடன் உலகச் சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தியிருக்கின்றார் அஞ்சு என்ற பெண்.
இந்தியாவில் முன்னாள் நீளம் தாண்டுதல் வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ். தனக்கு ஒரு கிட்னி மட்டுமே இருப்பதாக கூறியிருக்கின்றார். 2003 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தூரம் தாண்டுதலில் அஞ்சு பார்பி ஜார்ஜ் வெண்கலம் வென்றிருந்தார். ஆனால் போட்டிக்கு முன்னதாகவே அதே ஆண்டில் நடந்த மருத்துவ பரிசோதனையில் தனக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருப்பது அஞ்சுவுக்கு தெரிய வந்திருக்கின்றது.
அந்த வருடம் நடந்த உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அஞ்சு ஜார்ஜின் கணவரும் பயிற்சியாளருமான ராபர்ட் பாபி போட்டியில் கலந்து கொள்வதற்கு அஞ்சுவை தொடர்ந்து ஊக்குவித்து இருக்கின்றார்.
பின்னர் சிறிது இடைவெளியை எடுத்துக்கொண்ட அவர் ஐரோப்பியாவை சுற்றி பார்க்கவும் முந்தைய சாம்பியன்ஸ் போட்டிகளை பார்க்கவும் ஊக்குவித்த தனது கணவர் தன்னை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தயார் படுத்தினார். அவரால் தான் எனக்கு இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணமும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அஞ்சு பகிர்ந்து இருக்கின்றார்.