World News
ஷேக் ஹசீனாவின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா… வெளியான பரபரப்பு தகவல்…!
வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீடு ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக மாறியது. இதில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது அவர் இந்தியாவில் குடி புகுந்து இருக்கின்றார்.
இந்நிலையில் லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. அனுமதி கிடைத்தால் லண்டனுக்கு சென்று விடுவார் என்று கூறுகிறார்கள். ஆனால் இங்கிலாந்தின் குடியேற்ற சட்டத்தின் படி தனிநபர் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் அல்லது தற்காலிக தஞ்சம் கூற முடியாது.
அதனால் முறையாக அடைக்கலம் வேண்டி ஷேக் ஹசீனா முறையிட்டதாகவும் இது குறித்து இங்கிலாந்து அரசு தொடர்ந்து பரிசினை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதற்கிடையில் ஷேக் ஹசீனாவின் விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.