சீனாவையும், இத்தாலியையும் விட அதிகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகமாகியுள்ளது.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 24,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
சீனாவுக்கு பின்னர் அதிக பாதிப்புக் கொண்டிருந்த நாடாக இத்தாலி இருந்தது. பின்னர் சீனாவை விட அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடாக மாறியது. இந்நிலையில் இப்போது இந்த இரண்டு நாடுகளை விடவும் அதிகளவிலான கொரோனா பாதிப்பு கொண்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
சீனாவில் இதுவரை 81,782 பேரும், இத்தாலியில் 80,589 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த இரு நாடுகளையும் முந்திய அமெரிக்காவில் 85,500க்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் அதிகளவிலான நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3800 ஆகவும், இத்தாலியும் 8500 ஆகவும் இருக்க அமெரிக்காவில் 1178 ஆக உள்ளது.