World News
ஹோட்டல் அறைக்குள் ஏர் இந்தியா ஹோஸ்டஸ்… தரதரவென்று இழுத்துச் சென்ற கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்..!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் ஏர் இந்தியாவில் சேர்ந்த ஏர் ஹோஸ்டர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கடந்த வியாழக்கிழமை லண்டன் ஹீத்ரோவ் பகுதியில் ரேடிசன் ரெட் என்ற ஹோட்டலில் ஏர் இந்தியா விமான பணி குழுவினர் தங்கி இருக்கிறார்கள்.
அன்று இரவு சுமார் 1:30 மணி அந்தக் குழுவை சேர்ந்த விமான பணிப்பெண் தங்கி இருந்த அறைக்குள் ஒரு மர்ம நபர் நுழைந்து இருக்கின்றார். தூக்கத்தில் இருந்த பெண் விழித்து அவரை பார்த்தவுடன் அலறியடித்து இருக்கின்றார். இதனால் பதற்றமான அந்த மர்ம நபர் அந்த பெண்ணை துணிகள் தொங்கவிடப்படும் ஹேங்கரால் கடுமையாக தாக்கி இருக்கின்றார்.
தப்பி ஓட அந்த பெண் முற்பட்டபோது அவரை தரையில் தள்ளி தரதரவனை இழுத்துச் சென்று அடித்து இருக்கின்றார். அந்த நபரின் பிடியிலிருந்து வெளியில் வர முடியாமல் அந்த பெண் கடுமையாக போராடி இருக்கின்றார். இதனால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது .பெண்ணின் அலற சத்தம் கேட்டு யாரும் வந்து விடுவார்களோ என்று பயந்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஹோட்டல் நிர்வாகத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றது. பாதிக்கப்பட்ட பெண் விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.