Latest News
விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவில் உயிருடன் இருந்து எலிகள்… கத்தி கூச்சலிட்ட பயணிகள்…!
விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் எலி உயிரோடு இருந்ததை பார்த்து பயணிகள் கத்தி கூச்சலிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
நார்வே நாட்டிலிருந்து ஸ்பெயினுக்கு சென்ற ஸ்காண்டிநேவியன் ஏர்லைன் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்து கூச்சல் போட்டு இருக்கிறார்கள். இதனால் விமானம் அவசரமாக டென்மார்க்கில் தரையிறக்கப்பட்டது.
பின்னர் பயணிகள் அனைவரும் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்து இருக்கின்றது. மேலும் பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த அரிதான நிகழ்வு நடந்துள்ளது.
இனி இது போன்ற நடக்காதவாறு பார்த்துக் கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும் விமான பயணிகள் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் உணவில் எப்படி அதுவும் உயிருள்ள எலி வந்தது என்று பயணிகள் பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.