World News
9 வயது சிறுமிகளுக்கு திருமணமா…? ஈராக் அரசு செய்த சர்ச்சை மசோதா… அதிர்ச்சியில் மக்கள்…!
ஈராக்கில் பெண்களின் திருமண வயதை ஒன்பதாக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டம் மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த மசோதா படி, ஆண் குழந்தைகளுக்கு 15 வயதிலும், பெண் குழந்தைகள் 9 வயது எட்டிய பிறகு திருமணம் செய்து வைக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
தற்போது வரை ஈரானில் பெண்கள் திருமணத்திற்கான சட்டபூர்வமான வயது 18 ஆக உள்ளது. ஆனால் தற்போது முன்மொழிவு செய்யப்பட்டுள்ள மசோதாவின் படி பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில் 9 வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
சட்டபூர்வமாக 18 வயதாக இருந்தாலும், ஏற்கனவே ஈராக்கில் 28% பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பாகவே திருமணம் செய்து வைக்கப்பட்டு விடுகின்றது என்று ஐநாவின் குழந்தைகள் அமைப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த வயது தளர்வு ஈராக்கில் மேலும் குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் படி இருப்பதாக அஞ்சப்படுகின்றது.
ஏற்கனவே இந்த மசோதாவிற்கு எதிராக பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள். இந்நிலையில் மீண்டும் வயதை குறைத்து 9 வயதில் குழந்தைகளுக்கு திருமணம் என்பது மிக கொடுமையான விஷயம் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.