World News
நேபாளத்தில் விமான விபத்து.. 19 பயணிகளில் 18 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!
நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 18 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலை 19 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் ரன்வியில் வேகமாக சென்று மேலே எழும்ப முயன்ற போது திடீரென்று சறுக்கி விமான நிலையத்தை ஒட்டி இருந்த காலி இடத்தில் விழுந்து நொறுங்கியது.
விழுந்தவுடன் விமானம் திடீரென்று தீ பற்றி எரிந்தது. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மீட்பு குழுவினர் விரைந்து வந்து தீயை அனைத்து மீட்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர், இதில் 19 பேர் பலியாகி இருக்கிறார்கள். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பைலட் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
நேபாளத்தின் சவுர்யா விமானத்திற்கு சொந்தமான அந்த விமானம் பொக்கார என்ற இடத்திற்கு புறப்பட்டுச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்பட்ட விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.