சவுதி மன்னர் குடும்பத்தில் 150 பேருக்குக் கொரோனா! அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

சவுதி மன்னர் குடும்பத்தில் 150 பேருக்குக் கொரோனா! அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

சவுதி அரேபிய மன்னர் குடும்பத்தில் இளவரசர் உட்பட 150 பேருக்குக் கொரோனா இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3287 பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸுக்கு 44 பேர் இதுவரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 666 பேர் குணமாகியுள்ளனர். இந்நிலையில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்குக் கொரோனா இருப்பதால் தனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சவுதி அரேபியாவில் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர்களுக்கு தலைநகர் ரியாத்தில் வைத்து கொரோனா இருப்பது உறுதி செய்யபப்ட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தியதில் 150 பேர்களுக்கு கொரோன அறிகுறிகள் இருந்ததால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் மன்னர் குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என மறுக்கப்பட்டுள்ளது.