World News
சீனாவில் இடிந்து விழுந்த மேம்பாலம்.. 11 பேர் பலி, 30 பேர் மாயம்.. வெளியான அதிர்ச்சி தகவல்…!
சீனாவின் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
சீனாவின் ஹன்சி மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் மாயமாகி இருக்கிறார்கள். ஷாங்குலு என்ற நகரில் அமைந்துள்ள பாலம் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாலும் அதற்குப்பின் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இடிந்து விழுந்தது.
காலை நிலவரப்படி 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் பாலம் இடிந்த விபத்தால் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் ஆற்றில் விழுந்த ஐந்து வாகனங்களை மீட்பு குழுவினர் வீட்டுள்ளதாகவும் அதில் மாயமானவர்களை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. மீட்பு பணிகளுக்கு கூடுதலாக ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.