World News
பாலஸ்தீனத்தில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்… 100 பேர் பலி… அதிர்ச்சி சம்பவம்…!
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஜ் அமைப்பினருக்கும் இடையே 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர்வெடித்துள்ளது. ஹமாஜ் அமைப்பினரை முழுமையாக ஒலித்து கட்டுவோம் என்று இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது.
காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்நிலையில் கிழக்கு காசாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது வான் வெளிதாக்கல் நடத்தியுள்ளது. இதில் 100 பேர் பலியாகி உள்ளனர்.
50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். பள்ளியில் ஏராளமான மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இதனை தெரிந்து கொண்ட ஈஸ்டேல் தாக்குதல் நடத்தியுள்ளது என்று ஹமாஜ் அமைப்பு குற்றம் சாட்டி வருகின்றது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.