World News
ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகும் நீடிக்கும் போராட்டம்… 100க்கும் மேற்பட்டோர் பலி…!
வங்காள தேசத்திலிருந்து ஷேக் ஹசீனா வெளியேற்றப்பட்ட பிறகும் டாக்கா மற்றும் ஒரு சில பகுதிகளில் வன்முறை தொடர்ந்து நீடித்து வருகின்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். வங்காளதேசத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வன்முறை நீடித்து வருகின்றது. பிரதமரான ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராணுவ விமானம் மூலமாக நேற்று இந்தியாவிற்கு வந்தடைந்தார்.
அங்கிருந்து அவர் லண்டன் செல்ல இருப்பதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகின்றது. இதனிடையே வங்காள தேசத்தில் ராணுவம் தனது ஆட்சியை கைப்பற்றி இருக்கின்றது. மேலும் வங்காளதேசத்தில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவுகின்றது. வெளியேறிய பிறகும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
அங்கு இந்து கோவில்கள் தாக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் வீடுகள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் பிரதமர் மாளிகைக்குள் சென்று சூறையாடி ஹசீனாவுக்கு சொந்தமான அனைத்தையும் தீ வைத்து எரித்துள்ளனர். மேலும் அந்த நாட்டு மந்திரிகள் எம்பி களின் வீடுகளும் தாக்கப்பட்டது.
நேற்று மட்டும் வங்காள தேசத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை நடைபெற்றதில் 119 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறையில் இதுவரை 440 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. நேற்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை 37 உடல்கள் டாக்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே வங்காளதேசத்தில் தொடர்ந்து அமைதி நிலை வருவதாகவும் பஸ் வாகனங்கள் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளதாக சில கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.