பப்ஜி விளையாடிய 16 வயது சிறுவன் மரணம் – பெற்றோர்கள் உஷார்!

222
பப்ஜி விளையாடிய 16 வயது சிறுவன் மரணம்

மொபைலில் பப்ஜி எனும் விளையாட்டை தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக பப்ஜி எனும் வீடியோ கேம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் அடிமை படுத்தி வைத்துள்ளது. நேரம் காலம் பார்க்கமால் பலரும் இந்த விளையாட்டை இரவு பகலாக விளையாடி வருகின்றனர். ஒரு கட்டத்தில் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி சாப்பாடு தூக்கம் இன்றி அதையே விளையாடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில சமயம் இந்த விளையாடு மரணத்தை நோக்கியும் இழுத்து செல்கிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நீமூஷ் எனும் பகுதியில் வசித்து வரும் ரஷீஹ் என்பவரின் மகன் வர்மூன்(16). வர்மூன் இந்த பப்ஜி கேமை விளையாடுவதில் அதிக ஆர்வம் உடையவனாக இருந்துள்ளான்.

கடந்த 22ம் தேதி பப்ஜி விளையாட்டை தொடர்ந்து 6 மணி நேரம் அவன் விளையாடியுள்ளான். அப்போது, அவன் திடீரென மயங்கி கீழே விழுந்தான். அவனை மருத்துவமனையில் சேர்த்த போது அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் வர்மூனின் பெற்றோர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாருங்க:  அருண் ஜெட்லி காலமானார் - பாஜகவினர் இரங்கல்