கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் பல லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் கொரோனா பாதித்த நாடுகளில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதேபோல் ஊரடங்கு உத்தரவை பல்வேறு நாடுகளும் கடைப்பிடித்து வருகின்றனர். இதன் விளைவாக அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியில் உள்ளது. அதனை எப்படி சமாளிப்பது? என்று பல்வேறு ஆலோசனைகளும் அந்தந்த நாடுகள் மேற்கொண்டு வருகின்றது.
இது ஒரு பக்கமிருக்க மறுபக்கமாக பொருளாதார வீழ்ச்சியை எப்படி சமாளிப்பது என்று மன உளைச்சலில் ஒரு அமைச்சர் தற்கொலை செய்துள்ளார். ஜெர்மனியை சேர்ந்த நிதி அமைச்சர் ஒருவர் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க முடியாது என்று மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜெர்மனியிலுள்ள ஹெஸ்சி மாநிலத்தின் நிதி அமைச்சர் தாமஸ் ஸ்கிபெர் (Thomas Schaefer) கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி ரயில் தண்டவாளத்தில் தனது உயிரை மாய்த்து உள்ளார். இவர் அம்மாநிலத்தின் நிதியமைச்சராக பத்தாண்டு காலம் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது