பாலிவுட் நடிகை திஷா பத்தானி அவரின் நண்பரும் நடிகருமான டைகர் ஷரோப் பற்றி தெரிவித்துள்ள கருத்துக்கள் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எஸ். தோனி உட்பட பல ஹிந்தி படங்களில் நடித்தவர் திஷா பத்தானி. சினிமா மட்டுமில்லாமல் மாடலிங் துறையிலும் தடம் பதித்து வருகிறார். இவருக்கும் பாலிவுட் நடிகர் ஷரோப்பும் இடையே காதல் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏனெனில், பல்வேறு விழாக்களுக்கு இருவரும் ஒன்றாகவே ஜோடி போட்டு வருகின்றனர். ஆனால், இதை ஷரோப் மறுத்தாலும் திஷா மறுக்கவில்லை.
சமீபத்தில் திஷா அளித்த பேட்டியில் ‘ டைகர் எனது நண்பர்தான். ஆனால், நண்பர் என்பதை தாண்டி அவருடன் பழக வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவரை இம்ப்ரஸ் செய்ய பல சாகசங்களை கற்றுக்கொண்டேன். ஆனால், அவரை இம்ப்ரஸ் செய்ய முடியவில்லை. அவர் எதையும் மிகவும் மெதுவாக ஸ்லோ மோஷனில்தான் செய்வார். நான் எதையும் வேகமாக செய்வேன்” என அவர் பேட்டி கொடுத்துள்ளார்.