வாட்ஸ்ஆப் குரூப்பில் ஒருவர் அனுமதி இல்லாமல் அவரை சேர்க்க (Add) முடியாது. ஒருவர் அனுமதி இல்லாமல் அவரை ஒரு குரூப்பில் இணைக்க இயலாது, என்ற புதிய வழியை வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.வாட்ஸ்ஆப் செயலி உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றத்திற்கு ஏற்ற செயலியாக இருந்து வருகிறது. பல வகையில், உதவியாக இருக்கும் இச்செயலியை 1.3 பில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றர்.
தற்போது, அச்செயலில் பாதுகாப்புக்காக புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.
அதாவது, ஒருவர் அனுமதி இல்லாமல், ஒரு குரூப்பில் அவரை இணைக்க முடியாது என்ற மாற்றம் தான் அது.
அதை Settings > Account > Privacy சென்று அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் “My contacts” , “Nobody” , “Everyone” என்ற Optionsஐ நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.”Nobody” என்றால், எவரும் தனி ஒருவரை எந்த குரூப்பிலும் சேர்க்க இயலாது.
“My contact” என்றால், தனி நபரின் தொடர்பில் உள்ளவர்களால் மட்டும் அவரை ஒரு குரூப்பில் சேர்க்க இயலும்.”Everyone” என்றால், அனைவரும் ஒரு தனிநபரை அவர்கள் குரூப்பில் சேர்க்க இயலும்.
ஒரு குரூப்பில் ஒருவரை சேர்க்க அவருக்கு ஒரு தகவல் அனுப்பப்படும், மூன்று நாட்கள் வரை அவகாசம் இருக்கும் என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த வசதி விரைவில் அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கும் வழங்கப்படும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.