சில வருடங்களுக்கு முன்பு வாட்ஸப் என்ற நிறுவனம் மக்கள் தங்கள் கோப்புகளை அனுப்புவதற்காக வாட்ஸப் என்ற செயலியை தொடங்கியது. ஆரம்பத்தில் அவ்வளவாக வரவேற்பு பெறாத இந்த செயலி, ஆண்ட்ராய்டு மொபைலின் அசுர வளர்ச்சியால் விரிவாக வளர்ச்சியடைந்தது.
அரசு அலுவலகங்கள் பலவற்றில் வாட்ஸப் எண் மக்களுக்கு தரப்பட்டு அதன் மூலம் மக்கள் கோப்புகளை அனுப்பி வைக்கவும் ரிட்டர்னில் அதிகாரிகள் சரிபார்த்த கோப்புகளை மக்களுக்கு அனுப்பி வைக்கவும் வாட்ஸப் பெரிதும் உபயோகப்படுகிறது. காவல்துறையிலும் வாட்ஸப் எண் கொடுக்கப்பட்டு பலர் செய்யும் சமூக விரோத செயல்களை ரகசியமாக அனுப்புமாறு பல மாவட்டங்களில் வாட்ஸப் எண் நடைமுறையில் உள்ளது.
வாட்ஸப்பில் குரூப் ஃபார்ம் செய்து தொழில் சார்ந்த விசயங்கள், ஏரியா சார்ந்த விசயங்களை ஒருவர் அனைவருக்கும் அனுப்பலாம். பல அலுவலகங்களில் வாட்ஸப் பயன்பாடு பெருமளவில் உள்ளது.
வாட்ஸப்பில் ஒருவர் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தால் அவரை ஒரு வருடத்திற்கு ப்ளாக் செய்வது ம்யூட் என்ற ஆப்சனில் இருந்தது. இனிமேல் அப்படி செய்பவர்களை நிரந்தரமாக நீக்க வாட்ஸப் அப்டேட் செய்துள்ளது.