சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனைக்கு ரோபோ

சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனைக்கு ரோபோ

கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க புது புது முயற்சிகளை அரசுகளும், விஞ்ஞானிகளும் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில்  சிங்கப்பூரில் ரோபோ மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சிங்கப்பூரில் மூச்சுக்குழாயில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும் ரோபோக்களை அந்த நாட்டு விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

ஸ்வாப் போட் என பெயரிடப்பட்ட அந்த இயந்திர மனிதன் தானாகவே சிந்திக்கும் திறன் கொண்டது.

மருத்து பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 20 விநாடிகளில் அனைத்து வேலைகளையும் முடித்து விடுகிறது.