Connect with us

வெயில் அடிச்சா என்ன, காத்து அடிக்கலேன்னா நமக்கு என்ன?…தண்ணி விழுதே அதுவே போதும்…குற்றாலம் இன்று…

Courtallam

Entertainment

வெயில் அடிச்சா என்ன, காத்து அடிக்கலேன்னா நமக்கு என்ன?…தண்ணி விழுதே அதுவே போதும்…குற்றாலம் இன்று…

குற்றாலத்தின் சீசனில் இப்போது இருந்து வரும் மாற்றங்களைப் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் முடிவுக்கு வ்ந்து விடும் என நினைக்கும் படி இருந்து வருகிறது. இந்த வாரத் துவக்கத்திலிருந்தே சசன் மந்தமாகவே இருந்து வருகிறது. ஒரு சில நேரத்தை தவிர பல நேரங்களில் வான வறன்டே காணப்பட்டது.

சீசன் நேரத்தின் குற்றாலத்தின் தனிச் சிறப்பான குளிர் தென்றல் காற்றும், சாரலும் காணாமலேயே போய் விட்டது.வார வேலை நாட்கள் என்பதாலோ என்னவோ தெரியவில்லை கடந்த திங்கட்கிழமை முதலே குற்றாலத்திற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுன் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

Falls

Falls ( இன்று காலை பதினோரு மணி நிலவரம்)

ஆனால் நாளையும், நாளை மறு நாளும் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த நிலை மாறும் என அதிகம் எதிர்பார்க்கபடுகிறது. கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள “இந்தியன் – 2” படம் வேறு இன்று உலகம் முழுதுமே ரிலீஸ் ஆகி உள்ளது.

இதனால் அதிக பேரின் கவனம் அதன் மீது இருக்கும் என்பதால் இந்த வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் எப்படி இருக்கும் என்பதும் ஒரு வித குழப்பத்தோடே தான் இருந்தும் வருகிறது. இன்று காலை பதினோரு மனி நிலவரப்படி குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைவாகவே விழுந்து வந்தது.

வெயில் வெளுத்து கட்டியது, சாரல், மழைக்கான அறிகுறிகள் தென்படவே இல்லை பதினோரு மணி வரை. வெயில் அடித்தால் என்ன?, காற்று அடிக்கவில்லை என்றால என்ன, தண்ணீர் விழுகிறதே அதுவே போதும் என்ற மன நிலையில் தான் குற்றாலத்திற்கும் வந்து சுற்றுலாப் பயணிகளின் மன நிலை இருப்பதாக தெரிகிறது

More in Entertainment

To Top