Business
நீங்க ஸூம் ஆப்பை பயன்படுத்துறீங்களா?? அப்போ உடனே இதை படிங்க!!
ஸூம் செயலி – வீடியோ கான்ஃபரன்சிங்காக பயன்படுத்தப்படும் இந்த செயலியை பல்வேறு நாடுகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, ஐ.டி, வணிகம், மீடியா துறைகளில் பல்நாட்டு வாடிக்கையாளர்களுடன் இந்த செயலி முலம் தொடர்ப்பில் இருந்து வருகின்றனர். தற்போது, இந்தியாவில் ஊரடங்கு காரணமாக, ஐ.டி ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்து பணி புரிவதால் ஸூம் செயலியை அதிகளவில் பயன்படுத்திள்ளனர்.
இந்நிலையில், ஸூம்’ செயலி பாதுகாப்பானது அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸூம் (ZOOM) செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் அதில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, இதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.