tamilnadu
டிஎன்பிஎல் வாய்ப்பு கிடைக்காத சோகம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!
டிஎன்பிஎல்-லில் வாய்ப்பு கிடைக்காத விரட்டியில் இளைஞர் கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கிண்டி அருகில் உள்ள கத்திபாரா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 24 வயதான வாலிபர் ஒருவர் வந்திருக்கின்றார்.
நேற்று காலை 10:15 தனது வாகனத்தில் இருந்து இறங்கியவர். மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் பலரும் போலீஸ்க்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்த மாணவர் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகரை சேர்ந்த சாமுவேல் ராஜ் என்பவர் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் முதல் கட்ட விசாரணையில் சாமுவேல் ராஜ் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதும், டிஎன்பிஎல் தொடரில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் கத்திபாரா பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.