Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

tamilnadu

முதல் மனைவிக்கு தெரியாமலேயே 2-வது திருமணம் செய்த வாலிபர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

ஆவடி அடுத்த திருநின்றவூரை சேர்ந்த 21 வயது இளம் பெண் கேளம்பாக்கம் சர்ச் தெருவை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் 2022 ஆம் ஆண்டு மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் தங்களது வீடுகளுக்கு தெரியாமலேயே பதிவு திருமணம் செய்து கொண்டு திருநின்றவூரில் ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இளம் பெண்ணிடம் நகை மற்றும் பணம் கேட்டு பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் துன்புறுத்தி வந்திருக்கின்றார். பின்னர் அவரது வீட்டிற்கு சென்று இருக்கின்றார். அதன் பிறகு இளம் பெண்ணுடன் இருந்த தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகின்றது. இதைத்தொடர்ந்து இளம் பெண் அவரை தேடி கேளம்பாக்கம் வீட்டுக்கு சென்று இருக்கின்றார்.

அப்போது பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்ட இளம் பெண்ணுக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்ப நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து ஆம்ஸ்ட்ராங் இளம்பெண்ணிடம் உன்னை பதிவு திருமணம் செய்து கொண்டதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருக்கின்றார்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் பட்டாபிராம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த ஆம்ஸ்ட்ராங்கை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.