Latest News
மட்டன் கறிக்குள் புழு…புரட்டி எடுத்த பெற்றோர்…அசைவ பிரியர்கள் அதிர்ச்சி?…
வீடுகளில் சமையல் செய்ய நேரமில்லாமல் சிலரும், வீட்டிலேயே சாப்பிட்டு போர் அடித்து போகி ஹோட்டல்களுக்கு சென்று உணவு உண்ணும் பழக்கம் கொண்ட பலரும்.
இதே போல வேலை காரணமாக சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதற்காக கடை சாப்பாடு என தங்களது நேரத்திற்கும், விருப்பத்திற்கும் ஏற்றபடி முடிவுகளை எடுத்து சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளது தான் இன்றைய சமுதாயம்.
விடுமுறை தினங்களிலும், நேரம் கிடைக்கும் போது குடும்பத்தோடு ரெஸ்டரன்ட், ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட்டும், பொழுதை போக்கியும் வரும் பெற்றோர்களும் உண்டு.
தனது இரண்டு குழந்தைகளுடன் உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளார் ஒருவர். மட்டன் கறி ஆர்டர் செய்துள்ளார்கள் சாப்பிட.
தனது குழந்தைகள் சிறு வயதுகாரர்கள் என்பதால் அவர்களுக்கு மட்டன் எலும்பை சாப்பிடுவதில் கொஞ்சம் கஷ்டம் இருந்திருக்கிறது. இதனால் எலும்பை உடைத்து அவர்கள் சாப்பிடுவதை எளிதாக்க தட்டிலிருந்த எலும்பை எடுத்து உடைத்திருக்கிறார் அந்த நபர். அப்போது தான் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்திருந்தது.
எலும்புக்குள்ளே புழு இருப்பதை கண்ட அவர் உடனடியாக தனது பிள்ளைகள் சாப்பிடுவதை தடுத்து நிறுத்தியிருக்கிறார். உணவு விடுதி ஊழியர்களை அழைத்து இது குறித்த புகாரை சொல்லி லெஃப்ட் – அன்ட் ரைட் வாங்கியிருக்கிறார் வார்த்தைகளால் அவர்.
அதோடு மட்டுமல்லாமல் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இது போன்ற உணவு வழங்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? என கேள்விகளால் புரட்டி எடுத்திருக்கிறார். இதனை தனது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார்.
பிரபல செய்தி நிறுவனம் ஒன்று இந்த வீடியோவை ஒளிபரப்பியுள்ளது. இதனை பார்த்த அசைவ பிரியர்கள் கவணக்குறைவினால் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் இது போன்ற ரெஸ்டாரெண்ட்களில் இனி எப்படி சாப்பிடுவது என யோசிக்க துவங்கி விட்டனர். மட்டன் கறிக்குள் புழு இருந்த வீடியோவை பார்த்த் பலருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.