- Homepage
- Latest News
- மது ஒழிப்பு மாநாடு… பெண்கள் சீருடையுடன் பங்கேற்க வேண்டும்… திருமாவளவன் வேண்டுகோள்…!
மது ஒழிப்பு மாநாடு… பெண்கள் சீருடையுடன் பங்கேற்க வேண்டும்… திருமாவளவன் வேண்டுகோள்…!
மது ஒழிப்பு மாநாட்டிற்கு வரும் பெண்கள் சீருடைடன் பங்கேற்க வேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கின்றார்.
விழுப்புரம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அடுத்த மாதம் 2-ம் தேதி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற இருக்கின்றது. இது கடலூர் புதுச்சேரி ஆகிய மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ரவிக்குமார், எம்பி சிந்தனை செல்வன் எம்எல்ஏ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருமாவளவன் பேசியிருந்ததாவது “திருமாவளவன் மது இலக்கிய கிளம்பிவிட்டார் என சிலருக்கு அதிர்ச்சி. 2014 முதல் மக்கள் நல கூட்டணியில் பயணித்த போதே மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தினோம்.
கள்ளக்குறிச்சியில் 69 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். திமுகவை மிரட்ட மாநாடு நடத்துவதாக பலர் கூறுகிறார்கள். அப்போதுதான் திமுகவிடமிருந்து அதிக சீட்டு பேரம் பேச முடியும் என்று கூறுகிறார்கள். சிலர் அதிமுகவுடன் கூட்டணி என்றெல்லாம் பேசுகிறார்கள். மாநாடு நடத்த உடனடி காரணம் கள்ளக்குறிச்சி மரணம் தான் மாநாடு நடத்த வேண்டும் என எனக்கு சொல்லிக் கொடுத்தது.
தேர்தல் நேரத்தில் மட்டுமே அது குறித்து சிந்திப்பேன். எனக்கு இப்போது தேர்தல் கணக்கு கிடையாது. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் கூட்டணி சீட்டு குறித்து சிந்திப்பதுண்டு. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் அரசியல் கட்சி மற்ற நேரங்களில் இது அம்பேத்கர் கட்சி, பெரியார் கட்சி. பெண்கள் மாநாட்டிற்கு அதிகம் வர வேண்டும். லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ள வேண்டும்.
மது ஒழிப்பு பெண்களின் குரலாக இருக்க வேண்டும். இது கட்சி மாநாடு அல்ல அனைவருக்குமான பொது கோரிக்கை. யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம், மதுவை ஒழிப்போம் என்பதில் திமுக, அதிமுக, இடதுசாரிகள் விசிகாவுக்கு முழுமையான உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டியது அவசியம். காவேரி விவகாரத்தில் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என பேசுகிறோம்.
அதுபோல மது ஒழிப்பை எல்லோரும் ஒரே குரலில் பேச வேண்டும். வெளிப்படையாகவே திமுகவுக்கு வேண்டுகோள் வைக்கின்றேன். தேசிய கொள்கை வரையறை செய்ய வேண்டிய சூழல் இருக்கின்றது. ஒரு தேசிய கொள்கையை வரையறுக்கும் மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும். இந்த கொள்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகின்றது.
எல்லா ஆட்சியிலும் மதுவிலக்கு கொள்கை பேசப்படுகின்றன. தமிழகத்தில் பல பெண்கள் விதவைகளாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் மது. இதுவரை அரசியல் விழிப்புணர்வு மாநாட்டை நடத்தினோம். ஆனால் இந்த மாநாடு ஒட்டுமொத்த தேசத்தையும் ஊழலுக்கும் மாநாடு. அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள் சகோதரிகள் நீல நிற புடவைகளும், சிகப்பு நிற ஜாக்கெட் போட்டு சீருடையில் பங்கேற்க வேண்டும் என்று அவர் பேசி இருக்கின்றார்.