முதலாளியை காப்பாற்ற கட்டுவிரியன் பாம்புடன் போராடிய பூனை… இருப்பினும் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!

முதலாளியை காப்பாற்ற கட்டுவிரியன் பாம்புடன் போராடிய பூனை… இருப்பினும் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!

தனது முதலாளியை காப்பாற்றுவதற்கு கட்டுவிரியன் பாம்புடன் பூனை போராடி முயற்சி செய்தும் கடைசியில் அந்த பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே இருக்கும் கோட்டூர் ரோடு நேரு நகர் பகுதியில் சேர்ந்தவர் ரவி. இவரின் மனைவி சாந்தி. இவருக்கு வயது 58. இவர்களது மகன் சந்தோஷ் பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு சாந்தியின் கணவர் ரவி உயிரிழந்தார். சாந்தி தனது மகனுடன் தனியாக வசித்து வருகின்றார்.

மகன் வேலைக்குச் சென்ற பிறகு சாந்தி வீட்டில் தனியாக இருப்பார் என்பதற்காக அவருக்கு ஒரு பூனை வாங்கி கொடுக்கப்பட்டது. அந்த பூனைக்கு உணவு வைப்பது, அதனை சுத்தம் செய்வது, குளிப்பாட்டுவது கொஞ்சுவது என்று சாந்தி நேரத்தை போக்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இரவு சாந்தி ஒரு அறையிலும், மகன் மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது கட்டுவிரியான் பாம்பு ஒன்று அவர்களின் வீட்டுக்குள் புகுந்தது. இதை பார்த்த பூனை அந்த பாம்பை வீட்டுக்குள் வரவிடாமல் தடுக்க முயற்சி செய்தது. இருப்பினும் பாம்பு வீட்டுக்குள் வந்து விட்டது. அறைக்குள் பாம்பு புகுந்தது. இதை பார்த்த பூனை பாம்பை எதிர்த்து போராடியது பூனையை பார்த்து பாம்பு சீறி வர பூனை அதனை தடுக்க முயற்சி செய்தது.

இதனால் பூனைக்கும் பாம்பு இருக்கும் சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பூனையின் முயற்சி தோல்வி அடைந்து பாம்பு பூனையை கொன்று விட்டது, பின்னர் வீட்டில் படுத்திருந்த சாந்தியை பாம்பு கடித்ததால் சாந்தி சத்தம் போட்டு அலறி இருக்கின்றார். சத்தத்தை கேட்டு ஓடி வந்த மகன் அவரை மீது அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு சாந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சாந்தியின் மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.