53 ஆண்களை மயக்கி வலையில் வீழ்த்தி கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்த பெண் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியை சேர்ந்த சத்யா. இவருக்கு வயது 30. இந்த பெண்ணிற்கும், திருமணத்திற்கு பெண் பார்த்து வந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ஒருவர் ஒருவருக்கும் இடையே செல்போன் மூலமாக பழக்கம் ஏற்பட்டு இருக்கின்றது.
இருவரும் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின்பு இந்த தம்பதிகள் தாராபுரம் வந்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்கள். சத்யாவின் நடத்தையில் அவரின் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சத்யா மீது தாராபுரம் போலீசில் அவரின் கணவர் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சத்யாவை அழைத்து விசாரித்த போது அவர் சிறிது நேரத்தில் வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்று தலைமறைவாகிவிட்டார். பின்னர் போலீசார் அவள் மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு சத்யாவை பிடித்து விட்டனர்.
அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்ததும் அடுத்ததாக கரூரை சேர்ந்த சப்-இன்ஸ்க்டர் திருமணம் செய்ததும், பின்னர் மாட்டு வியாபாரி ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து பணம் பெற்றது. அடுத்து மற்றொரு வாலிபர் என திருமணம் செய்து குடும்பம் நடத்தி குழந்தை பெற்றது தெரியவந்துள்ளது.
பின்னர் போலீசார் சத்யாவை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதற்கிடையில் இந்த திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சத்யாவின் பெண் புரோக்கரான கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். தலை மறைவாக இருக்கும் தமிழ்செல்வியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்போது மேலும் பல திட்டம் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில் தமிழ்செல்வி திருமணமாகி முதல் கணவரை பிரிந்து தற்போது வேறு ஒரு நபருடன் வசித்து வருகிறார் எனவும் சத்தியாவும், தமிழ் செல்விக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தில் பெண்பார்ப்பவர்களை நோட்டமிட்டு பணம் பறிக்க இப்படி ஒரு திட்டத்தை தீட்டியது தெரியவந்துள்ளது. பெண் பார்ப்பவர்களை ப்ரோக்கர் என அறிமுகமாகி சத்யாவின் படத்தை அனுப்பி திருமணத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்து அவர்களிடமிருந்து பணத்தைக் கறந்திருக்கிறார்கள்.
சத்யாவும் திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பிறகு 10 முதல் 20 பவுன் நகை வரை எடுத்துக்கொண்டு தப்பித்து இருக்கின்றார். இதே போல் இருவருக்கும் மேற்பட்டவரை ஏமாற்றி இருக்கின்றார். 30க்கும் மேற்பட்ட வரை அவர்களுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை காட்டி மிரட்டி 10 முதல் 20 லட்சம் வரை பணம் பறித்து இருக்கின்றார். இவ்வாறு 53 பேரிடம் ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார் சத்யா. இவரை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.