Latest News
சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல்… வெளியானது பரபரப்பு சிசிடிவி…!
துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கின்றது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை துறைப்பாக்கத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அவர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேசில் அடைத்து வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் பிரபு போலீஸ் படையுடன் சூட்கேஸை கைப்பற்றினார்.
பின்னர் தென்சென்னை இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, அடையார் துணை கமிஷனர் பொன். கார்த்தி, உதவி கமிஷனர் பரத் ஆகியோரும் நேரில் சென்று விசாரணையை முடக்கி இருக்கிறார்கள். இந்நிலையில் சென்னை துறை பாகத்தில் பெண்ணை கொலை செய்து சூடேசியில் வைத்து வீசி சென்ற விவகாரத்தில் மணிகண்டன் என்பவர் குற்றவாளியாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றார்.
அவர் அந்த பெண்ணின் உடலை பெட்டியில் வைத்து இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கின்றது. நேற்று அதிகாலை 2.50 உடலை பெட்டியில் வைத்து இழுத்துச் செல்லும் சிசிடி காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. இரண்டு நிமிடங்களில் பெட்டியை வீசிவிட்டு மீண்டும் அவர் வீட்டிற்கு செல்லும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.