கன்னியாக்குமரி மாவட்டத்தில் வசித்து வந்த வசந்தா எனும் பெண் தனது கள்ளக்காதலனையே மகளுக்குத் திருமணம் செய்து வைத்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் கணவனை பிரிந்து வாழும் வசந்தா எனும் பெண். இவரது மகனான லால் கிருஷ்ணன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக அதிகமாக தூக்க மாத்திரைகள் தின்று உயிரிழந்துள்ளார். ஆனால் வசந்தாவின் கணவர் தன் மகன் சாவில் மனைவியின் மேல் சந்தேகம் இருப்பதாக போலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலிஸார் வசந்தாவை ரகசியமாகக் கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வசந்தாவுக்கும் அவரது மகளின் கணவரான சுபணனுக்கும் தகாத உறவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவருக்குமான உறவு சுபணன் அவரது மகளைத் திருமணம் செய்வதற்கு முன்பிருந்தே இருந்ததாகவும் அதை மறைக்கவே 15 வயது வித்தியாசத்தில் தனது மகளுக்கு அவரைத் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இவர்களின் கள்ள உறவைப் பற்றி தெரிந்து கொண்டதால்தான் மகனைத் தூக்கமாத்திரைகள் போட்டு இருவரும் கொலை செய்தனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இப்போது அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.