Connect with us

கள் விற்பனையை நீங்க ஏன் அனுமதிக்க கூடாது?… அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..!

tamilnadu

கள் விற்பனையை நீங்க ஏன் அனுமதிக்க கூடாது?… அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..!

கள் விற்பனையை ஏன் தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியிருக்கின்றது.

சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில் 2020 முதல் 21 ஆம் ஆண்டு 39 ஆயிரத்து 760 கோடி ரூபாயும், 2021 முதல் 22 ஆம் ஆண்டில் 42, 421 கோடி ரூபாயும் விற்று டாஸ்மாக் நிர்வாகம் முதலிடத்தை பிடித்தது., இந்த ஆண்டுகளில் 161 கோடி ரூபாயும், 69 கோடி ரூபாய் இழப்பையும் சந்தித்ததாக தெரிவித்திருந்தது.

டாஸ்மாக்களுக்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாக இருக்கின்றது. டாஸ்மாக் நிர்வாகம் குறிப்பிட்ட சில பிராண்ட் மதுபானங்களை மட்டுமே விற்பனை செய்கின்றது. தமிழகத்தில் விற்பனையாகும் மதுபானங்களின் தரத்தைக் காட்டிலும் வெளிநாட்டுகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் தரம் அதிகமாக இருக்கின்றது.

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகமாக வைத்து விற்பனை செய்வதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் கிடைக்கும் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மதுபான பாட்டில்களில் அச்சிடப்படும் விற்பனை விலையை விட கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என எல்லா டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  இதனை விசாரித்த போது தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மதுபானங்களை ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் யாரும் தலையிட முடியாது என்று தெரிவித்திருந்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் பரிசீலனை செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பினர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் வரும் ஜூலை 29ஆம் தேதி தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

More in tamilnadu

To Top