Latest News
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு ஏன்…? முதல்வர் மு க ஸ்டாலின் விளக்கம்…!
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது ஏன் என்பது தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்து இருக்கின்றார்.
நேற்று முன்தினம் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி நேற்று மாலை 3:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் 4 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்று கொண்டார்கள். அதை தொடர்ந்து துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டதற்கு பலரும் நெகட்டிவ்வான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்திருந்ததாவது “இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
எனக்கு துணையாக அல்ல நாட்டு மக்களுக்கு துணையாக அவர் இருக்கப் போகிறார். அமைச்சரவையில் இணைந்துள்ள செந்தில் பாலாஜி, கோவி. செழியன், ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மிகுந்த நம்பிக்கையோடு நமக்கு வாக்களித்துள்ள மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும்” என்று அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றார்.