Connect with us

நாம் எப்ப சென்னையில் சைக்கிளிங் போவது..? ராகுல் காந்தியின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின்..!

Latest News

நாம் எப்ப சென்னையில் சைக்கிளிங் போவது..? ராகுல் காந்தியின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின்..!

நாம் எப்போது சென்னையில் சைக்கிளிங் செல்வது என்று ராகுல் காந்தி கேட்ட கேள்விக்கு முதல்வர் மு க ஸ்டாலின் பதில் அளித்து இருக்கின்றார்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு சென்றிருக்கின்றார். தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும் வளர்ச்சியையும் மேம்படுத்திருப்பதற்காகவும் முதல்வர் மு க ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் சென்றிருக்கின்றார்.

அமெரிக்காவின் சிகாகோ கடற்கரை பகுதியில் நேற்று சைக்கிளை ஓட்டி உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவை பார்த்த பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து பிரதர் நாம் எப்போது சென்னையில் சைக்கிளிங் செல்வது என்று பதிவிட்டிருந்தார். இதை பார்த்த முதல்வர் மு க ஸ்டாலின் ராகுல் காந்தியின் பதிவிற்கு பதில் அளித்து இருக்கின்றார்.

அந்த பதிவில் “அன்பிற்குரிய சகோதரரே… எப்போது நேரம் கிடைக்கின்றதோ சென்னையை சைக்கிளில் சுற்றி அந்த தருணத்தை அனுபவிக்கலாம். ஏற்கனவே ஒரு ஸ்வீட் பாக்ஸ் நான் தரவேண்டிய பாக்கியுள்ளது. சைக்கிள் உலா முடிந்ததும் என் வீட்டில் தென்னிந்திய மதிய உணவை ஸ்வீட்டுடன் ருசிக்கலாம் ” என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

More in Latest News

To Top