Connect with us

தமிழகத்தில் இரவு 10 மணி வரை… எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை தகவல்…!

tamilnadu

தமிழகத்தில் இரவு 10 மணி வரை… எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை தகவல்…!

தமிழகத்தில் 35 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேற்கு திசை காட்டிலும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 35 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  சென்னையை பொருத்தவரை ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் இன்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

More in tamilnadu

To Top